Wednesday, 27 June 2012

Devar Ponmozhikal


ஆன்மீக ஞானி,
தேசியத் தலைவர்,
பொதுவுடைமைத் தலைவர்,
வலது சாரி உள்ளம் கொண்ட இடதுசாரி அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட
அய்யா பசும்பொன் திரு. உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் சிந்தனை மொழிகள் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள, தெரிந்தவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள இங்கே பதியப்படுகிறது.

பசும்பொன் தேவரின் சிந்தனை மொழிகள்

ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானியாரின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசு ஆட்சியை வகுக்கும்.



ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.

இங்கே இருக்கின்ற அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள்.

தக்க தலைவர்கள் இல்லையென்றால் மக்களிடையே எழுச்சி உண்டாக்க முடியாது.

உண்மையான தலைவன் மாலையையும், தூக்குமேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான்.

ஆன்மீகத்தின் பெயரைச் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சம் அணிவதும், விபூதி காவியாடை தரிப்பதும், மொட்டையடித்து பண்டாராமாகி, பண்டாரம் மடாதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, மறைவில் பொன் ஆசை, பெண் ஆசை இவை போன்ற ஆசைகளால் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்து போய் நிற்கின்றன. ஆன்மீகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாகக் கொண்ட போலிகள் மலிந்துள்ள காலம் இது.

பாம்பின் வாய்ப்பட்ட தேரை தன் உடலெல்லாம் விழுங்கப் பெற்று தன் மரண அவஸ்தையிலிருக்கும் போதும் தன்னருகில் வரும் ஈயைக் கவ்வுவதற்கு வாயை திறப்பதை போலவே மனிதனுக்கு ஆசை அவன் ஒழியுமட்டும் இருந்து கொண்டே இருக்கிறது.

ஹரிஜனங்கள் பணக்காரர்களாக இருப்பார்களானால் அவர்களோடு கைகோர்த்து கலந்து வாழவும், சம்பந்தம் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். இது யாரும் பேசும் கற்பனை அல்ல. பணம் இல்லாத போது ஏழையை யாரும் சீண்டுவதும் கிடையாது. இது நாம் பார்க்கிற உண்மை.

அக்கிரமச் செயல்களைக் கண்டிப்பதும், நியாயமான செயல்களைக் காணும் பொது அதனிடம் அனுதாபம் கொள்வதும் மனித ஜென்மத்திற்க்கே உரிமையான குணமாகும்.

வீரம் என்ற குணம் தான் எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது.

இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்.

நீதியை நிலை நிறுத்துவதற்கான சட்டங்கள் ஆதிகாலத்தில் உற்பத்தி பண்ணப்பட்டன. இன்றைய நீதியானது சட்டத்திற்காக கை நழுவ விடப்படுகிறது.

ஹரிஜனங்களுக்கு புதிதாக நிலம் வழங்கப்படுமானால், அவர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் முயற்சி செய்து உழுது கொண்டு வாழ்வோர்களாகச் சர்க்கார் ஆக்குமானால் பிறருக்கு கைகட்டி வாழ்கின்ற இழிவான நிலைமையிலிருந்து மாறி நல்ல விவசாயிகளாவார்கள்.

தங்களுக்குள்ளேயே ஹரிஜனங்கள் ஒன்று சேர, சாப்பிட கூசுகிற பொழுது எங்களை ஒன்றாக இருக்கச் சொல்கிறார்களே என்று உயர் ஜாதியார் எங்களை போன்ற சீர்திருத்தவாதிகளைக் கேட்க முடியாத நிலையை உண்டாக்க வேண்டும்.

உண்மையாகவே ஏழை விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று சர்க்கார் கருதினால் விவசாயிகள் நவீன முறையில் விவாசாயம் செய்து கிராமங்களில் தங்கி இருப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்? நல்லவைகள் வாழ்க என்று சொன்னால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.

எதையும் சொல்லுகின்ற காலத்தில் ஒருவருக்கொருவர் கலந்து பேச வேண்டும் என்ற மனப்பான்மை நம்மை விட்டு போய் சில வருடங்கள் ஆகின்றன.

Monday, 14 May 2012

வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு




 
ஜான்சி ராணி தோன்றுவதற்கு, ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பே தமிழகத்தில் தோன்றி, வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர் தான் வீரமங்கை வேலுநாச்சியார். நம் நாட்டின் பெண்களின் கையில் கரண்டி படித்து பார்த்திருக்கிறோம் ஆனால் அக்காலத்தில் வால்ஏந்தி நின்ற காட்சியை பார்த்தால் இப்பொழுதும் பிரம்மிப்பாகத்தான் இருக்கிறது. உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் வழக்கமுள்ள ஒரு காலக் கட்டத்தில், தன் கணவர் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரைக் கொன்ற வெள்ளையர்களைத் துணிவுடன் எதிர்த்து நின்று போரிட்டுப் பழிதீர்த்ததுடன், வெற்றியும் பெற்றுச் சுதந்திரதேவி போல் அரசாண்ட இந்தத் தமிழரசி.தான் வீரமங்கை வேலுநாச்சியார். 

வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி நம் வீரமங்கை வேலுநாச்சியார் இது நம் தமிழ் இனத்திற்கு கிடைத்த மிக்ப்பெரிய பெருமை. 

பிறப்பு

1730லஆம் ஆண்டுஇராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் வேலுநாச்சியார். பிறப்பில் பெண்னாக இருந்தாலும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஒரு ஆணுக்குறிய அத்தனை பயிற்சியும் கற்று தேர்ந்தார் ஆயுதப் பயிற்சியையும்  பெற்றார்; பல மொழிகள் கற்று கல்வியிலும் சிறப்புற்றார். 1746ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாத்தேவருக்கு மனைவியானார்.

ஆங்கிலேயர் படையெடுப்பு
1772ல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்த படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு, வெள்ளையர்களை விவேகத்துடன் எதிர்த்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்களுடன், வேலுநாச்சியாரே போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.



படை திரட்டல்
1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். நாச்சியார் தொடர்ந்து பூஜை செய்ய உத்தரவிட்டார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருதுபெரிய மருது, வேலுநாச்சியார் அவர்கள் தரைலமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.
வேலு நாச்சியார் கைப்பற்றிய தமது நாட்டிற்கு பெரிய மருதுவை தளபதியாகவும், சின்னமருதுவை அமைச்சராகவும்த நியமித்தார். வேலுநாச்சியார் மகள் வெள்ளச்சிக்கும் சக்கந்தி வேங்கண் தேவருக்கும் திருமணம் செய்து வைத்தார். 1780-1789 வரை ஆட்சியில் இருந்தார். 1789-ல் மருமகனுக்கு ஆட்சிப்பொறுப்பை மாற்றிக் கொடுத்தார்.

இறுதி நாட்கள்
1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் வம்சாவழிப்பட்டியல் கீழே உள்ளது.




சிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்

1. 1728 - 1749 -
முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 - 1789 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1790 - 1793 - இளவரசி வெள்ளச்சி நாச்சியார் - ராணி வேலு நாச்சியாரின் ஒரே மகள்
5. 1793 - 1801 - வேங்கை பெரிய உடையணத்தேவர் இளவரசி வெள்ளச்சி 
             நாச்சியாரின்  கணவர்
6. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத 
            பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி 
             வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
7. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்
8. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்
9. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்
10. 1048 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்
11. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
12. 1877 - முத்துவடுகநாதத்தேவர்
13. 1878 - 1883 - துரைசிங்கராஜா
14. 1883 - 1898 - து. உடையணராஜா
15. 1898 - 1941 - தி. துரைசிங்கராஜா
16. 1941 - 1963 - து. சண்முகராஜா
17. 1963 - 1985 - து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா
18. 1986 - முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.